ஒட்டன்சத்திரம், ஜூலை 6: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள எம்.அத்தப்பன்பட்டியைச் சேர்ந்தவர் துரைச்சாமி மகள் ஹரிதா (26). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த இடையகோட்டை போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகாக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், ஹரிதாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.