கிருஷ்ணகிரி, ஜூலை 3: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் போதசந்திரம் கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண், ராயக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம், அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது பெற்றோர் கெலமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
அதில், அதேபகுதியை சேர்ந்த ஆதி (21) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், அவரிடமிருந்து மகளை மீட்டு தரவேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.