கிருஷ்ணகிரி, ஜூலை 18: குருபரப்பள்ளி அருகே உள்ள மாரச்சந்திரம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண். தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 8ம் தேதி, வெளியே செல்வதாக கூறி சென்றார். நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரை நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர், குருபரப்பள்ளி போலீசில் புகாரளித்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த முகமது (20) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம், அவரிடம் இருந்து மகளை மீட்டு தர வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
இளம்பெண் கடத்தல்; வாலிபர் மீது புகார்
52
previous post