Friday, March 1, 2024
Home » இளம்பெண்ணை கொன்று சடலம் தீ வைத்து எரிப்பு * குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை * சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு ஐதராபாத்தில் பலாத்காரம் செய்யப்பட்டாரா?

இளம்பெண்ணை கொன்று சடலம் தீ வைத்து எரிப்பு * குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை * சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு ஐதராபாத்தில் பலாத்காரம் செய்யப்பட்டாரா?

by Karthik Yash

திருமலை, ஜன. 11: ஐதராபாத்தில் இளம்பெண்ணை கொன்று சடலம் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை பலாத்காரம் செய்து கொன்றார்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மொய்னாபாத்தின் புறநகர் பகுதியான பாகாரத்தில் விவசாய நிலத்தின் அருகே நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் தீப்பற்றி எரிவதை அப்பகுதி விவசாயிகள் கவனித்தனர். யாரோ குப்பைகளை எரிப்பதாக முதலில் நினைத்தனர். ஆனால் தீ மளமளவென பரவியதால் சந்தேகமடைந்த விவசாயிகள் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அங்கு இளம்பெண்ணின் உடல் எரிந்து கொண்டிருந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பீதியடைந்த விவசாயிகளால் தீயை அணைக்க முயற்சிக்கவில்லை. போலீசார் வரும் வரை உடல் எரிந்து கொண்டே இருந்தது. இதனால் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைப்பதற்குள் உடல் அடையாளம் தெரியாதபடி எரிந்து கருகியது.

சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் தடயவியல் குழு மூலம் தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு செய்தனர். ஆனால் மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொலையான பெண்ணுக்கு சுமார் 30 வயது இருக்கும் என தெரிகிறது. அவரை கொலையாளிகள் வேறு இடத்தில் கொன்று இங்கு கொண்டு வந்து எரித்தது தெரியவந்தது. அவரது முகம் அடையாளம் தெரியாத நிலையில் சிதைக்கப்பட்டிருந்தது. கொல்லப்பட்ட இளம்பெண் யார்? அவரை யாராவது பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் கொன்று எரிக்கப்பட்ட இளம்பெண்ணின் பின்பக்க பேண்ட் பாக்கெட்டில் செல்போன் எரிந்த நிலையில் இருந்தது. ஆனால் அதில் சிம்கார்டு இல்லை. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் சடலம் எரிக்கப்பட்ட பகுதி முற்றிலும் விளைநிலங்கள் மற்றும் வெறிச்சோடிய பகுதி என்பதால், சிசிடிவி கேமராக்கள் இல்லை. எனவே நெகேபள்ளே- பாகாரம் வழித்தடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் பட்டப்பகலில் இளம்பெண் சடலம் எரிக்கப்பட்டதால், அப்பகுதியை சேர்ந்த யாராவது இந்த செயலில் ஈடுபட்டார்களா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

4 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi