பெரம்பூர், மே 26: புளியந்தோப்பு டிம்லர்ஸ் சாலை பகுதியில் வசித்து வருபவர் பிரியா (26, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக தன்னுடன் பணிபுரியும் வியாசர்பாடி தேசிகானந்தபுரம் 1வது தெருவை சேர்ந்த திலீப் குமார் (30) என்பவரை காதலித்து வந்தார். திலீப் குமார் பிரியாவை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து இருவரும் நெருக்கமாக இருந்து உள்ளனர்.
இந்நிலையில் பிரியா கடந்த சில மாதங்களாகவே திலீப் குமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் வந்துள்ளார். ஆனால் திலீப் குமார் மறுத்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா இதுகுறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திலீப் குமார் மீது வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை தேடி வருகின்றனர்.