Tuesday, June 25, 2024
Home » இளம்பெண்ணிடம் ₹9.22 லட்சம் மோசடி

இளம்பெண்ணிடம் ₹9.22 லட்சம் மோசடி

by Karthik Yash

புதுச்சேரி, மே 19: புதுச்சேரியில் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிகம் சம்பாதிக்கலாம் என கூறி இளம் பெண்ணிடம் ரூ.9.22 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி முத்திரையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துர்காதேவி (28). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம நபர் ஒருவர் துர்காதேவியை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரி போல் பேசியுள்ளார். அப்போது, பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிகம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.

இதை நம்பி அவரும் பல்வேறு பரிவர்த்தனைகளாக ரூ.9.22 லட்சம் முதலீடு செய்துள்ளார். பின்னர், முதலீடு செய்ததில் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது, மர்ம நபர் கூடுதலாக ரூ.1 லட்சம் டெபாசிட் செய்து பிறகே பணத்தை எடுக்க முடியும் என்று கூறியுள்ளார். அதன் பிறகே, மோசடி கும்பலிடம் துர்காதேவி ஏமாந்தது தெரியவந்தது. இதேபோல், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என மோசடி கும்பல் கூறியதை நம்பி வாணரப்பேட்டையை சேர்ந்த ஸ்லெஸ்டின்ராஜ் ரூ.7 ஆயிரமும், குண்டுப்பாளையத்தை சேர்ந்த ஸ்ருதி ரூ.60 ஆயிரத்தை முதலீடு செய்து, அவர்களுக்கு கொடுத்த பணியை செய்து முடித்துள்ளனர். அதன்பிறகு, சம்பாதித்த பணத்தை எடுக்க முடியாமல் மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.

லாஸ்பேட்டையை சேர்ந்த ராகுல் என்பவரின் வங்கி கணக்கிலிருந்து ஆதார் எனேபிள் பேமெண்ட் சிஸ்டம் முறையில் ரூ.10 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. நெல்லித்தோப்பு அண்ணா நகரை சேர்ந்த அஜய் பாலாஜி என்பவர் இணையதளம் மூலம் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு ரேக் ஆர்டர் செய்து ஏமாந்துள்ளார். மேற்கூறிய நபர்கள் உட்பட மொத்தம் 5 பேரிடம் ரூ.10 லட்சத்து 29 ஆயிரத்தை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

12 − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi