சின்னமனூர், அக். 16: சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை மற்றும் குச்சனூர் பேரூராட்சிகளில் சின்னமனூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இல்லம் தோறும் இளைஞர் அணி தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. தேனி வடக்கு மாவட்ட அவை தலைவரும், சின்னமனூர் மேற்கு ஒன்றிய தேர்தல் பொறுப்பாளருமான செல்லப்பாண்டி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
இதில் சின்னமனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பட்டி முருகேசன், குச்சனூர் பேரூர் செயலாளர் திலீப் குமார், மார்க்கையன்கோட்டை முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் மகேந்திரன், அய்யம்பட்டி கிளை செயலாளர் ஆனந்தன், வடக்கு மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன், தீபன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இரு பேரூராட்சிகளிலும் அதிகமானோர் இளைஞர் அணியுடன் சேர்ந்து சென்று சேர்த்தனர்.