விராலிமலை:புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அமைந்துள்ள புனித பதுவை அந்தோணியார் தேவாலயத்தில் புனித ஜெபமாலை மாதாவின் சொரூபம் தாங்கிய தேர் பவனி நடைபெற்றது. நிகழாண்டு 1 தேதியிலிருந்து 31ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு புனித அந்தோணியார் தேவாலயத்தில் புனித ஜெபமாலை மாதாவின் மன்றாட்டும் மாதாவின் புகழ் மாலையும் மாதாவின் பாடல்கள் பாடியும் மாதாவின் மன்றாட்டை கூறியும் நவநாள் நடைபெற்றது.விழா நாட்களில் நவநாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நவ நாட்களில் பெண்கள் பணிக்குழுவை சேர்ந்த பெண்கள் ஆலயத்தில் கூடி மாதாவின் மன்றாட்டு புகழ் மாலை பக்தி பாடல்களை பாடி மாதாவிற்கு ஜெபங்களை வேண்டுதல்களை கூறி வழிபட்டனர்.விழாவின் இறுதி நாளான நேற்று (31ம் தேதி) மாலை 6 மணி அளவில் மாதாவின் நவநாள் முடிந்து புனித ஜெப மாலை மாதா சுரூபம் தாங்கிய தேர் பவனியானது ஆலயத்தை சுற்றி வலம் வந்தது. இதில் இளைஞர்கள் பெண்கள் பணிக்குழு மற்றும் அனைவரும் கலந்து கொண்டு மாதாவின் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் மாலை 7 மணி அளவில் மாதாவின் தேர் ஆலய வளாகத்தை வந்தடைந்தது.அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியை இலுப்பூர் பங்குத்தந்தை அருட்பணி ஆரோக்கியராஜ் மற்றும் இணை பங்குத்தந்தை அருட்பணி ஆரோக்கியராஜ் இருவரும் இணைந்து நடத்தினர்.