பெரம்பலூர், ஆக. 19: இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு சார்ந்த கட்டுரைப் போட்டி நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டம், இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில், மக்கள் சக்தி இயக்கம் சார்பில் போதை ஒழிப்பு சார்ந்த கட்டுரைப் போட்டி நடைபெற்றது. போட்டியில் 9, 10, ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் பரிசு பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி விஜய தர்ஷினிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மாயக்கிருஷ்ணன் சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பள்ளி ஆசிரியர்கள் செல்வராணி, சின்னசாமி, அருணா, மற்றும் பள்ளி மேலாண் மைக்குழுத் தலைவர் இந்திராணி ஆகியோர் பாராட்டினர்.