நாமக்கல், ஜூன் 17: ராசிபுரம் அடுத்த முத்துகாளிப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் உமாவிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: எங்களில் பலர் வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். ஒரு சிலருக்கு சொந்த வீடு இருந்தாலும், 3 முதல் 5 மகன்கள் இருப்பதால் இடநெருக்கடியாக உள்ளது. ராசிபுரம் அரசு பணிமனை அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இலவச வீட்டுமனை பட்டா கோரி கலெக்டரிடம் மனு
0
previous post