தர்மபுரி, நவ.12: பாலக்கோடு தாலுகா, திருமல்வாடி அருகே கரிக்குட்டனூர் கிராம மக்கள், நேற்று கலெக்டர் சாந்தியிடம் அளித்த மனு விபரம்: பாலக்கோடு தாலுகா திருமல்வாடி அருகே, கரிக்குட்டனூர் கிராமத்தில் 80 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் வசிக்கும் யாருக்கும், இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். எங்களது வாழ்வாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு
0
previous post