போச்சம்பள்ளி: மத்தூர் ஒன்றியம், களர்பதி ஊராட்சியில் ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். டாக்டர்கள் நிர்மல்குமார், கார்த்திக். மகாலட்சுமி, தனுஷ்குமார் மற்றும் குழுவினர் பொது மக்களுக்கு இருதய நோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் மற்றும் கால் மூட்டுவலி, சிறுநீரக கோளாறு, காது மூக்கு தொண்டை உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் செய்தனர். முகாமில் துணை தலைவர் தமிழ்செல்வி, கவுன்சிலர் மகேஸ்வரி மாதப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் சரவணன் நன்றி கூறினார்.