ஈரோடு, ஜூலை 10: இலவச சர்க்கரை நோய் மற்றும் கண் சிகிச்சை முகாம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. ஈரோடு, திருநகர் காலனி, கே.என்.கே. சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், இதயம் நற்பணி இயக்கம் சார்பில், மோனிகா டயபடிஸ் சென்டர், ஈரோடு மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரசன் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து இந்த இலவச சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் கண் சிகிச்சை முகாமை நடத்தின.
இதயம் நற்பணி இயக்கத்தலைவர் மகாதேவன் தலைமை வகித்தார். ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி ஆகியோர் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தனர். டாக்டர்கள் தங்கவேலு, பாலசுப்ரமணியம் தலைமையிலான குழுவினர் சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையையும், டாக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் கண் சிகிச்சையையும் மேற்கொண்டனர்.
முகாமில், திமுக பகுதி செயலாளர் ராமச்சந்திரன், 27-வது வார்டு கவுன்சிலர் ஜெயந்தி, ஆனந்தா லேப் தெய்வசிகாமணி, நற்பணி இயக்கத்தின் பொருளாளர் காளத்தி நாதன், துணை தலைவர் குகன், நிர்வாகிகள் சண்முக கணபதி, மோகன், செல்வராஜ், திருநாவுக்கரசு, சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கிராமப்புறங்களில் உதடு பிளவு மேல் அண்ணப்பிளவு பாதிக்கப்பட்டோருக்கு இலவச அறுவை சிகிச்சைக்காக விழிப்புணர்வு போஸ்டர் வெளியிடப்பட்டது.