முத்துப்பேட்டை, ஆக. 18: முத்துப்பேட்டை அடுத்த பாண்டி தியாகையா திருமணம் மண்டபத்தில் நலமாணிக்கர் சுவாமிகள் நிர்வாகம் சார்பில் சிறுவர்களுக்கான இலவச கராத்தே யோகா சிலம்பம் பயிற்சி துவக்க விழா நேற்று திருத்துறைப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் தலைமையில் நடைபெற்றது. வட்டார காங்கிரஸ் தலைவர் வடுகநாதன் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமை எடையூர் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் துவக்கி வைத்து பேசினார்.எடையூர் உயர் நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மேட்டுக்கோட்டகம் சண்முகம், பொருளாளர் நாகராஜன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ராஜராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.தொடர்ந்து மாணவர்களுக்கு கராத்தே, யோகா, சிலம்பம் ஆகிய பயி ற்சியை கராத்தே பயிற்சியாளர்கள் கொடுத்தனர். இதில் ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்றனர். முடிவில் காங்கிரஸ் வட்டார செயலாளர் விஜயகாந்த் நன்றி கூறினார்.