கூடலூர்: கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் இயங்கி வரும் ரோட்டரி சங்க அலுவலகத்தில், மாதாந்திர இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது. கூடலூர் ரோட்டரி வேலி சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமில் திட்ட இயக்குனர் சத்யன் பாபு, எலிசபத் மேரி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் அஜிலால், திவாகரன் மற்றும் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். இம்முகாமில் 127 பயனாளிகள் கலந்து கொண்டனர். முடிவில் 35 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.