ராமேஸ்வரம், ஆக.22: ராமேஸ்வரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி 17 ஆண்டுகளுக்கு நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ராமேஸ்வரம் கிளை சார்பில் பொன்விழா கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி பொந்தம்புளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியை தென்மண்டல பொறுப்பாளர் ஓவியர் வென்புறா துவக்கி வைத்தார். கிளைத் தலைவர் ராமச்சந்திர பாபு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பாரம்பரிய பறையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் நடந்தது. கிராமிய கலைப்பாடல்கள், முற்போக்கு விழிப்புணர்வு பாடல்கள் பாடி கலைஞர்கள் அசத்தினர். தொடர்ந்து புதுகை பூபாளம் கலைக்குழுவினர் நாட்டு நடப்பை நையாண்டியாகப் பேசி சிரிக்க சிந்திக்க வைத்தனர். \”எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு\” எனும் தலைப்பில் சாத்தூர் லெட்சுமணப் பெருமாள் உரை நிகழ்வு நடைபெற்றது.
இலக்கிய இரவு நிகழ்ச்சி
previous post