சேந்தமங்கலம், ஆக.30: எருமப்பட்டி ஒன்றியம் சிவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சசி(39). இவர் அதேபகுதியில் கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைககு விற்பனை செய்து வருவதாக எருமப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற எஸ்ஐ பெரியசாமி தலைமையிலான போலீசார், சசியின் இறைச்சி கடையில் சோதனை நடத்தினார். அப்போது கடையில் மதுபாட்டிகளை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சசியை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.