சேலம், ஏப். 21: மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இன்று(21ம் தேதி) சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு உத்தரவின்படி, இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாநகர பகுதியில் செயல்படும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் இன்று தங்கள் கடைகளை மூடி, அரசு உத்தரவினை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அரசு உத்தரவினை மீறி செயல்படும் இறைச்சி கடை உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் இன்று மாநகரில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இறைச்சி கடைகள் செயல்பட்டால்,அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.