செய்முறை : முதலில் இறாலை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்பு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பொட்டுக்கடலை, தேங்காய்த்துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இறாலையும் நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு தேங்காய் விழுதுடன் அரைத்த இறால், மிளகாய்த்தூள், பெருஞ்சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு, நறுக்கின வெங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி கையில் வைத்து தட்டி எண்ணெயில் போடவும். மொறுமொறுப்பான இறால் வடை ரெடி.
இறால் வடை
previous post