செய்முறை இறாலை கழுவி சுத்தம் செய்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும். குடமிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டவும். பல்லாரி, பூண்டை மிகவும் பொடியாக நறுக்கவும். வெங்காய தாளையும் நறுக்கவும். முதலில் இறாலை எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும். பொரித்த எண்ணெயில் பல்லாரியை போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் நன்றாக வதக்கவும். இத்துடன் சில்லி பிலேக்ஸ், சிறிதளவு உப்பு, சர்க்கரை, சோயா சாஸ், சில்லி சாஸ், டொமெட்டோ சாஸ் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் குடமிளகாய், வெங்காய தாள் சேர்த்து ஒரு சுற்று வதக்கி பொரித்த இறாலை சேர்த்து பிரட்டி இறக்கவும். சுள் சுவையில் இறால் மஞ்சூரியன் ரெடி.
இறால் மஞ்சூரியன்
80
previous post