செய்முறை: முதலில் இறாலை தோல் நீக்கி நன்றாக சுத்தம் செய்யவும்.
பின்பு சின்ன வெங்காயத்தை உரித்து மெலிதாக நறுக்கவும். கழுவிய இறாலுடன்,
மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறி அரை மணி
நேரம் ஊற வைக்கவும். மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், கசகசா, பூண்டு, இஞ்சி, 7
சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக அரைக்கவும். வெறும் வாணலியில் பிசறிய
இறாலை போட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும். பின்னர் மற்றொரு
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை
போட்டு பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் அரைத்த மசாலாவை போட்டு வதங்கிய
பின், பாதி வெந்த இறாலையும் போட்டு மிதமான தீயில் வதக்கவும். 10 நிமிடம்
கழிந்தபின் இறக்கி கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து இறக்கவும். பின்பு
பரிமாறவும். டிபன், சாதத்துக்கு ஏற்ற இறால் மசாலா ரெடி.
இறால் மசாலா
79
previous post