நன்றி குங்குமம் டாக்டர் அறிந்துகொள்வோம்‘‘நாம் சாப்பிடுகிற உணவு வயிற்றில் இருந்து, சிறுகுடலுக்கு 4 மணி நேரத்தில் சென்றுவிடும். திரவ உணவுகள் என்றால், அரை மணி நேரத்தில் இருந்து 45; நிமிடங்களுக்குள் சென்றுவிடும். இந்த குறிப்பிட்ட நேரத்தில் உணவின் பயணம் நிகழாமல், தாமதமாவதை கேஸ்ட்ரோபெரசிஸ்(Gastroparesis) என்கிறோம்.; இந்த செரிமானப் பிரச்னை ஏற்படுவதற்கு ஒரு சில முக்கியக் காரணங்கள் இருக்கின்றன’’ என்கிறார் இரைப்பை மற்றும் குடலியல் சிகிச்சை மருத்துவரான; வினோத்குமார். கேஸ்ட்ரோபெரசிஸ் விழிப்புணர்வு மாதம் என ஆகஸ்ட் மாதத்தை மருத்துவ உலகம் கடைப்பிடித்து வருகிற சூழலில்,; இதுபற்றி அவரிடம்; விரிவாகக் கேட்டோம்…‘‘கேஸ்ட்ரோபெரசிஸை தமிழில் இரைப்பை வாதம் என்று குறிப்பிடலாம். மருத்துவத்தில் ஒரு நோய் வருவதற்கான காரணங்களில்; இடியோபத்திக்(Idiopathic) வகை என்று என ஒன்று உண்டு. அதாவது, சில பிரச்னை எதனால் வருகிறது என்பது சரியாக உறுதியாக சொல்ல முடியாது.; இதையே இடியோபதிக் என்கிறோம். உதாரணத்துக்கு நூறு பேரை எடுத்துக்கொண்டால், 20-லிருந்து 30 பேருக்கு இப்பாதிப்பு எதனால் வருகிறது என்பது தெரியாது.; எனவே, இந்த நோயைக் ‘காரணம் அறியப்படாத நோய்’ என்று சொல்வோம். இதைத் தவிர்த்துவிட்டு, இந்த நோய்க்கான மற்ற காரணங்களில் எது; முக்கியமானது? என்று பார்க்கும்போது, நம் ஊரில் சர்க்கரை நோய்தான் கேஸ்ட்ரோபெரசிஸ்-க்கு முதன்மையான காரணமாக கருதப்படுகிறது.சர்க்கரை நோய் உள்ள நூறு பேரில் 30 பேருக்கு இரைப்பை வாதம் வருகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில், யாருக்கு இந்நோயின் தாக்கம்; அதிகமாக உள்ளது என்று பார்க்கும்போது, ஆண்களைவிட பெண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக நிறைய மருத்துவத்துறை ஆய்வுகள் மூலம் தெரிய; வருகிறது. சர்க்கரை நோயில் டைப் – 1 டயாபட்டீஸ், டைப் -2 டயாபட்டீஸ் என இரண்டு வகைகள் உள்ளன. முதலாவது வகை டயாபட்டீஸ் இன்சுலின்; சார்ந்தது. அதாவது இளம் வயதிலேயே வரக்கூடியது. பெரும்பாலானோருக்கு நாற்பது வயதுக்கு மேலே வருவதைத்தான் டைப்-2 டயாபட்டீஸ் என சொல்வோம்.; இந்த இரண்டு வகைகளில், இளம் வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு இரைப்பை பாதிப்பு அதிகம் உள்ளது.டைப்-2 டயாபட்டீஸ் நோயாளிகளுக்கு இந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனாலும், கேஸ்ட்ரோபெரசிசுக்கு முக்கிய காரணமாக டயாபட்டீஸ்; கருதப்படுகிறது. டயாபட்டீஸ் பற்றி இன்னொரு முக்கியமான விஷயத்தையும் இங்கே கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். அதாவது, கடந்த ஐந்து வருடங்களில்; இரைப்பை வாதம் அறிகுறி உள்ள சர்க்கரை நோயாளிகள் நிறைய பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவேதான், சர்க்கரை நோயாளிகளுக்கு கேஸ்ட்ரோபெரசிஸ்; முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. சர்க்கரை நோயை அடுத்து, வைரஸ் தொற்று காரணமாக சில பேருக்கு இரைப்பை வாதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள்; உள்ளன. ஆனால், ஒரு வருடத்துக்குள்ளேயே இந்த நோய் தானாகவே குணம் அடைந்துவிடும்.ஏனென்றால், அனைத்து வகையான வைரஸ் தொற்றுகளும் தானாகவே சரியாகிவிடும் தன்மை கொண்டவை. முக்கியமாக, இரைப்பை வாதத்தால்; பாதிப்புக்குள்ளான தசைப்பகுதிகளும், நரம்புகளும் பழைய நிலையை அடைந்து, இந்நோய் வந்ததற்கான தடயமே இல்லாமல் இருப்பதைக் காண்கிறோம். வைரஸ்; தொற்றை அடுத்து அல்சர் போன்ற வயிறு தொடர்பான பாதிப்புகளுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்குக் கேஸ்ட்ரோபெரசிஸ் வருவதைக் காண; முடிகிறது. மேலும், வேகஸ்(Vagus) நரம்பில் ஏதேனும் கோளாறு ஏற்படும்போதும் ஒரு சில மருந்து, மாத்திரைகள் சாப்பிடும்போதும் இப்பாதிப்பு தற்காலிகமாக; வரும். குறிப்பாக வலி, பிரஷர் ஆகியவற்றிற்கு மாத்திரைகள் எடுத்துகொள்ளும்போதும் கேஸ்ட்ரோபெரசிஸ் வரும்.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர் இரைப்பை வாதம் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளாரா என்பதைக் கண்டுபிடிப்பது சிரமமான விஷயம். ஏனென்றால், இப்போது; சொல்லப்போகிற அறிகுறிகள் நிறைய பேருக்கு இருப்பது போல தோன்றும். சில நீரிழிவு நோயாளிகளுக்கு வாந்தி உணர்வு இருக்கும். கேஸ்ட்ரோபெரசிஸ்; நோயாளிகளில், 99% பேருக்கு இந்த அறிகுறி காணப்படும். அதேவேளையில் இந்த அறிகுறி இரைப்பை வாதத்திற்கு மட்டும் வருவது இல்லை. வயிறு; புண்ணாதல் போன்ற நோய்களுக்கும் இது அறிகுறியாகும். கேஸ்ட்ரோபெரசிஸ் நோய்க்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத இடியோபத்திக் வகையில் நிறைய பேர்; வயிற்றுவலியுடன்தான் வருவார்கள். நீரிழிவு நோயாளிகளில் நிறைய பேருக்கு வயிற்றுவலி இருக்காது.வாந்தி உணர்வு, வயிற்று வலி, சாப்பிட்ட உடனே வயிறு பெரிதாக தோன்றுதல், சாப்பிடுவதில் விருப்பமின்மை அல்லது குறைவாக சாப்பிடுதல், காலை மற்றும்; மதியம் சாப்பிட்ட உணவு இரவில் வாந்தியாக வெளிப்படுதல் இவையெல்லாம் இரைப்பை வாதத்திற்கான முக்கிய காரணங்கள் ஆகும். இந்த அறிகுறி; உள்ளவர்கள் Over The Counter மாத்திரைகள், சிரப் வாங்கி சாப்பிடுவார்கள் அல்லது வீட்டில் தயாரித்த சுக்கு காபி குடிப்பார்கள். இவர்களுக்கு என்ன; பிரச்னை இருக்கிறது? என்பது தெரியாது. ஏனென்றால், இது ஒரு நாளோ, இரண்டு நாளோ இருக்கிற பிரச்னை இல்லை. வாழ்நாள் முழுவதும் உள்ள பிரச்னை.; உடனடியாக பார்க்காவிட்டால் இது அதிகமாகிவிடுகிற பிரச்னை என்பது அவர்களுக்குத் தெரியாது.மேலே சொன்ன அறிகுறிகள் இருப்பது தெரிந்தால், தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்வது நல்லது. கேஸ்ட்ரோபெரசிஸ் வயிற்றை அமுக்கி பார்த்தல்; ஸ்டெதாஸ்கோப் வைத்து பார்த்தாலோ(Physical Examination) பெரிதாக தெரியாது. காலை வேளையில் சாப்பிட்ட உணவு அப்படியே இருப்பதால்,; வயிறு உப்பசமாக தெரியும். இதை வைத்து மட்டும் 100 சதவீதம் இரைப்பை வாதம் என சொல்ல முடியாது. இதற்கென்று சில பரிசோதனைகள் உள்ளன. அந்தப்; பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு முன்னர், எந்த நோயாளி வந்தாலும், எண்டோஸ்கோப்பி செய்வோம். ஏனென்றால், இரைப்பை வாதமும், குடல் அடைப்பும்; ஒரே மாதிரியாகத்தான் வெளிப்படும்.மருத்துவத்துறையில் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால், நோயாளிகளுக்கு மயக்க மருந்து இல்லாமலேயே எண்டோஸ்கோப்பி செய்ய முடியும். இதற்கான; நேரமும் குறைந்து விட்டது. தற்போது, ஒன்றரை நிமிடம் முதல் இரண்டு நிமிடத்துக்குள் எண்டோஸ்கோப்பி செய்து விடுகிறோம். பொதுவாக சாப்பிட்ட ஆறு; மணிநேரம் கழித்துதான் எண்டோஸ்கோப்பி செய்வோம். அப்போது வயிற்றின் உள்ளே உணவு இருப்பது தெரிந்தால் ஏதோ ஒரு அடைப்போ அல்லது ஏதோ ஒரு; பிரச்னை இருப்பது தெரியும். ஆனால், என்ன பிரச்னை என்பது தெரியாது. ஆகவே, எண்டோஸ்கோப்பி சிறுகுடல் இரண்டாவது பகுதி வரை மட்டுமே செல்லும்.; இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டால் சிறுகுடல் மூன்றாவது பகுதி வரை நார்மல் எண்டோஸ்கோப்பி போகும்.அவ்வாறு எண்டோஸ்கோப்பி செல்லும்போது, இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதியில் அடைப்பு எதுவும் இல்லையென்றால், முதலில்; கேஸ்ட்ரோபெரசிஸ்ஸாகத்தான் பரிசோதனை செய்ய வேண்டும். அந்தப் பரிசோதனையில் கட்டிகள், அல்சரால் சுருக்கம் மற்றும் அடைப்பு இருப்பது தெரிய; வந்தால் நிச்சயமாக குடலில் அடைப்பு உள்ளது என்று அர்த்தம். அடைப்பு எந்த இடத்திலும் கிடையாது; எண்டோஸ்கோப்பி சிறுகுடல் வரை எந்தவிதமான; தடையும் இல்லாமல் செல்கிறது என்றால், கண்டிப்பாக இரைப்பை வாதம் பாதிப்பு இருக்கிறது என்று முடிவு செய்து அடுத்த கட்ட பரிசோதனைகளை; மேற்கொள்ளலாம். முக்கியமாக, நோயாளிக்கு ஒரு மாவை சாப்பிடக் கொடுத்து, எக்ஸ்-ரே எடுக்க வேண்டும்.அதில் அந்த மாவு எவ்வளவு நேரத்துக்குப் பிறகு சிறுகுடலை அடைகிறது என பார்க்க வேண்டும். நாம் சாப்பிடுகிற உணவு வயிற்றில் இருந்து, சிறுகுடலுக்கு 4; மணி நேரத்தில் சென்றுவிடும். திரவ உணவுகள் என்றால், அரை மணி நேரத்தில் இருந்து 45 நிமிடங்களுக்குள் சென்றுவிடும். இதை Gastric Emptying; Time எனச் சொல்வோம். இந்த நேரம் அதிகமாகும்போதுதான், கேஸ்ட்ரோபெரசிஸ் எனச் சொல்வோம். எண்டோஸ்கோப்பி செய்யாமல் இரைப்பை வாதத்தை 90%; கண்டுபிடிக்க முடியும். இதனை Gastric Emptying scintigraphy என குறிப்பிடுவோம். இதற்கு நோயாளிக்கு முட்டையுடன் Radioisotope; கலந்து கொடுப்போம். இதன்மூலம் வயிற்றில் உள்ளவற்றை ஸ்கேன் செய்யலாம். சிறிதளவே கொடுக்கப்படும் Isotope மூலம் கேஸ்ட்ரோபெரசிஸ் இருப்பதை; உறுதிப்படுத்தலாம்.Isotope மூச்சுகுழாய் வழியாக வெளியேறிவிடும். இதனால், பாதிப்பு எதுவும் வராது. சாப்பாடு வயிற்றில் தங்குவதை அவசியம் கண்டுபிடிக்க வேண்டும்.; ஏனென்றால், இதனால் பாதிப்புகள் அதிகம். ஏற்கனவே சொன்ன மாதிரி சர்க்கரை நோயாளிகளுக்குத்தான் பிரச்னைகள் அதிகம். சாப்பாடு வயிற்றில் தங்குவதால்; பாக்டீரியாக்கள் உருவாகும். அதன் காரணமாக மற்ற நோய்கள் வரும். துர்நாற்றம் வீசும். அடுத்த வேளை சாப்பிட முடியாது. உணவில் இருந்து கிடைக்க; வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. குளுக்கோஸ் அளவு மாறிக் கொண்டே இருக்கும். நீர்ச்சத்து குறையும். எனவே, சர்க்கரை நோயாளிகள் சோர்வு அடைய; வாய்ப்பு உண்டு. செரிக்காத உணவுப்பண்டங்கள் வயிற்றின் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும்.இதன் அளவு அதிகரிக்க அதிகரிக்க, வயிற்றில் இருந்து வெளியேறுவது கஷ்டம். பின்னர், அறுவை சிகிச்சை செய்துதான் அகற்ற வேண்டி இருக்கும். இரைப்பை; வாதம் பாதிப்பு உள்ள நோயாளிகள் சிகிச்சைக்காக வரும்போது, என்னென்ன உ ணவு சாப்பிட வேண்டும்? என்னென்ன மருந்து, மாத்திரைகள் எடுத்து கொள்ள; வேண்டும் என்பது பற்றி அறிவுறுத்துவோம். எளிதில் ஜீரணமாகாத உணவு வகைகள், நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள், கொழுப்பு நிறைந்த; உணவுப்பண்டங்கள், மது ஆகியவற்றை முழுவதும் தவிர்க்க சொல்வோம். திரவ உணவு வகைகளில், ஊட்டச்சத்து நிறைய உள்ளவற்றை குடிப்பது பயன் தரும்.; உதாரணத்துக்குத் தண்ணீருக்குப் பதிலாக இளநீர் அருந்துவது சிறந்தது.உடற்பயிற்சிகள் செய்வதால், உடல் எடை குறைந்து, இப்பாதிப்பு தானாகவே சரியாகும். கடைசியாகத்தான் மாத்திரைகள் சாப்பிட சொல்வோம். முக்கியமாக,; இரைப்பையின் தசைகளின் இயக்கத்தை அதிகரிக்கும் மருந்து கொடுப்போம். உணவு, உடற்பயிற்சி மற்றும் மாத்திரைகள் ஏற்றுக்கொள்ளாத நோயாளிகளுக்கு; அறுவை சிகிச்சைத்தான் தீர்வு. இவர்களுக்கு; லேப்ரோஸ்கோபி மூலம் லைலோரஸ் (சிறுகுடலையும் இணைக்கும் பகுதி) பெரிது படுத்துவோம்; இரைப்பை; வாதத்திற்கான சிகிச்சை முறையில், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல் ரொம்ப முக்கியம். இவை அனைத்தையும்விட, மக்களிடம் விழிப்புணர்வு; ஏற்படுத்துவது ரொம்ப முக்கியம்.’’– விஜயகுமார்
இரைப்பையில் வாதம் வந்தால்…
previous post