திருச்சி, ஜூன் 11: திருச்சியில் மாயமான இரு சக்கர வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மேலசிந்தாமணி கரூர் ரோட்டை சேர்ந்தவர் நூர்முகமது (38). இவர், பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவர் கடந்த 7ம் தேதி தெப்பக்குளம் பகுதியில் தனது டூ வீலரை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது டூவீலர் மாயமானதால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.