கிருஷ்ணகிரி, ஜூலை 3: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே இரும்பு குழாய்கள் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்ததில் முற்றிலும் நாசமானது. சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, பெரிய அகரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (33), லாரி டிரைவர். இவர் இரும்பு குழாய்களை ஏற்றிக் கொண்டு மேட்டூரில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே ஜக்கேரி அருகே லாரியை ஓட்டி சென்ற போது, லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரி முழுமையாக எரிந்து நாசமானது. இது குறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில், கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
இரும்பு குழாய்கள் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து நாசம்
0
previous post