நாமக்கல், ஜூலை 2: நாமக்கல் அடுத்த காதப்பள்ளியில், தனியார் இரும்பு கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனி குடோனில் இருந்த 50 கிலோ எடைகொண்ட இரும்பு சேனல்களை ஒருவர் டூவீலரில் வைத்து திருடிச்சென்றதை அருகே இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்த அந்த நபரை மடக்கிப்பிடித்து நல்லிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் காதப்பள்ளி அருகே மட்டபாறைப்புதூரை சேர்ந்த ஜெகதீசன் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த இரும்பு சேனல்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தனியார் இரும்பு கம்பெனி மேலாளர் பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இரும்பு கம்பி திருடியவர் கைது
0