ஓசூர், ஆக.4: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி சுற்றுவட்டார பகுதியில், கட்டுமான பணிகளுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கம்பி உள்ளிட்ட இரும்பு பொருட்கள் அடிக்கடி திருடு போனது. இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு வந்தன. இதுகுறித்து கட்டுமான பணியாளர்கள் மத்திகிரி போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில், ஓசூர் டிஎஸ்பி பாபுபிரசாந்த் உத்தரவின் பேரில், மத்திகிரி எஸ்ஐ கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் விசாரித்து வந்தனர். மேலும் பழைய குற்றவாளிகள் பட்டியல் வைத்து விசாரித்து வந்தனர். போலீசாரின் விசாரணையில், கட்டுமான இரும்பு பொருட்களை தொடர்ச்சியாக திருடி வந்தது கொத்தூரை சேர்ந்த தனுஷ் (19), சுனில் (22), சீனிவாஸ் (33) முருகேஷ் (32) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று தனுஷ், சுனில், சீனிவாஸ், முருகேஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இரும்பு கம்பிகளை திருடிய 4 ேபர் கைaது
previous post