பாலக்கோடு, ஜூன் 24: பாலக்கோடு அடுத்த ராஜாதோப்பு முனியப்பன் கோயில் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (50). இவர் கடந்த 19ம் தேதி, தனது நிலத்தில் உழவு பணிகளை செய்து வந்தார். அப்போது அங்கு வந்த வேடியப்பன் (30) என்பவர், இந்த நிலத்தில் உழவு பணி செய்ய கூடாது என கூறி உள்ளார். மேலும், இந்த நிலம் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்த நிலையில், மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் கந்தசாமி மற்றும் வேடியப்பன் இரண்டு குடும்பத்தினரும், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில், பாலக்கோடு போலீசார், இருதரப்பை சேர்ந்த வடிவேல் (41), கந்தசாமி (58), முத்துகவுண்டன் (45), பாப்பாத்தி(50), வேடியப்பன் (30), முனியப்பன்(32), ராஜாம்மாள் (55) உள்ளிட்ட 7பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.