சோமனூர், டிச.19: கணியூர் பவுன்டரில் வேலை செய்யும் சுபாஷ் சந்திரபோஸ் கடந்த ஒரு வாரம் முன்பு தன்னுடைய இரு சக்கர வாகனம் காணாமல் போனதாக கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், போலீசார் நேற்று கருமத்தம்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த வழியாக வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
பின்னர், போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம், படுக்கப்பத்து பகுதியை சேர்ந்த தங்க இசக்கி (21) என்பது தெரியவந்தது. இவர் சரவணம்பட்டி, சின்ன மேட்டுப்பாளையம், அக்கம்மாள் கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். இவர், அப்பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததுள்ளார். மேலும், அவர் சுபாஷ் சந்திர போசினுடைய பைக்கை திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க இசக்கியை கைது செய்தனர்.