சாத்தூர், ஆக.3: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.58 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலாகி இருந்தது. சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று கோயிலில் 10 நிரந்தர உண்டியல்கள், கோசாலை உண்டியல் மற்றும் அன்னதான உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
கோயில் உதவி ஆணையாளர் சுரேஷ், பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காணிக்கை எண்ணும் பணியில் மகளிர் சுயஉதவி குழுவினர், பக்தர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில், ரூ.58 லட்சத்து 18 ஆயிரத்து 676 ரொக்கம், 102 கிராம் தங்கம் மற்றும் 474 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.