அயோத்தியா: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னமும் மசூதி கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது சர்ச்சைகளை எழுப்பியது. இந்நிலையில், “தன்னிப்பூர் மசூதி கட்டுமான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளோம். அனுமதிக்கப்பட்ட வரைபடங்கள் உள்ளிட்டவை ஒருசில துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு பிறகு ஐஐசிஎப்-பிடம் ஒப்படைக்கப்படும். இந்த நடவடிக்கைகள் விரைவில் முடிவடையும்” என அயோத்தி ஆணையர் கவுரவ் தயாள் தற்போது தெரிவித்துள்ளார். “அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து அனைத்து அனுமதிகளும் கிடைத்த பிறகு, விரைவில் மசூதி கட்டுமான திட்டம் இறுதி செய்யப்படும்” என ஐஐசிஎப் செயலாளர் அதர் உசேன் தெரிவித்துள்ளார். …