திங்கள்சந்தை, ஜூன் 27: இரணியல் அருகே மாடத்தட்டுவிளை வடக்கு தெருவை சேர்ந்தவர் அனீஸ் குமார்.கொத்தனார். இவரது மனைவி சோனியா. இந்த தம்பதிக்கு 13 வயதில் மகள் உள்ளார். அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களை அருகில் வசித்து வரும் சோனியாவின் தாயார் ரோஸ்மேரி (58) அவ்வப்போது சென்று பார்த்து வருவது வழக்கம்.
இதற்கிடையே கடந்த மே மாதம் 16ம் தேதி ரோஸ்மேரி சென்றபோது சோனியா, அனீஸ் குமார் ஆகிய 2 பேரும் சோகமாக இருந்துள்ளனர். அவர் என்னவென்று கேட்ட போது எதுவும் சொல்லவில்லை. இந்தநிலையில் மாலை சோனியாவின் சகோதரி சோனியாவுக்கு போன் செய்துள்ளார்.
போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதனிடையே மாடதட்டுவிளையில் இருந்து சுற்றுலா சென்றவர்கள், அவர்கள் 3 பேரையும் அடுத்த நாள் (மே17) வேளாங்கண்ணியில் பார்த்து உள்ளனர். அப்போது ஒரு வாரம் சுற்றுலா வந்ததாகவும் பின்னர் வீடு திரும்பி விடுவதாகவும் கூறியுள்ளனர்.