திங்கள்சந்தை, ஜூலை 1: இரணியல் அருகே ஞாறோடை சேர்ந்தவர் கணபதி (70). இவரது மனைவி சியாமளா (65). கடந்த 22ம் தேதி கணபதி தனது உறவினர் வீட்டிற்கு மனைவியுடன் பைக்கில் சென்றார். பின்னர் 2 பேரும் வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டு இருந்தனர். பள்ளம்பாலத்தில் பைக் வந்தபோது பின் டயர் திடீரென பஞ்சரானதாக தெரிகிறது. இதனால் பைக் நிலை தடுமாறியதில் பின்னால் அமர்ந்திருந்த சியாமளா தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சியாமளா பரிதாபமாக இறந்தார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
0