திங்கள்சந்தை, ஜூன் 17: இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் புஷ்பாகரன் (65). விவசாயியான இவர் பசு, எருமை மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று 2 பசு மாடுகள், 7 எருமை மாடுகளை அருகே உள்ள தனது தோட்டத்தில் கட்டி வைத்து விட்டு வீட்டுக்கு வந்தார். மறுநாள் காலை சென்று பார்த்த போது அவற்றை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல் அருகே பால் வியாபாரியின் 9 மாடுகள் திருட்டு
0