திங்கள்சந்தை, ஜூலை 4: குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் பால்சிங் (52). பூ கட்டும் தொழிலாளி. அவரது மனைவி பாப்பா(45) தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். பால்சிங்கிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று வேலை முடிந்து போதையில் வந்த பால்சிங், சாப்பிட்டு விட்டு இரவு அவரது அறைக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை பால்சிங் எழும்பி வராததால் அவரது மனைவி கதவை தட்டியுள்ளார். ஆனால் எந்த சத்தமும் வரவில்லை. கதவு உள்பக்கம் சாவியால் பூட்டப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் மாற்றுச்சாவி மூலம் கதவை திறந்தபோது, பால்சிங் உத்திரத்தில் மின்வயரில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த இரணியல் போலீசார் பால்சிங் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாப்பா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இரணியல் அருகே தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
0