திங்கள்சந்தை, அக். 25: இரணியல் செக்காலர்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (68). அவரது மனைவி ஜெயா. இந்த தம்பதிக்கு 2 மக்கள்கள் உள்ளனர். சம்பவத்தன்று காலை மூத்த மகள் ரெஜினி (38) வீட்டு விசேஷத்திற்கு ஜெயா சென்று விட்டார். அப்போது தனியாக இருந்த ராஜேந்திரனுக்கு மாலை நேரத்தில் அவரது மகள் ரெஜினி போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்க வில்லை. இதனால் தாயும், மகளும் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது ராஜேந்திரன் புதிதாக கட்டியிருந்த வீட்டின் மாடியில் உள்ள படுக்கையறையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்துள்ளார். ரெஜினி தந்தை ராஜேந்திரனை தட்டி எழுப்பி என்னவென்று கேட்டுள்ளார். அப்போது வீடு புதிதாக கட்டியதில் கடன் அதிகமாகி விட்டது.