திருத்துறைப்பூண்டி, ஆக. 21: திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற குறுவட்ட அளவி லான இறகு பந்து போட்டியில் இரட்டையர் பிரிவில்புனித தெரசாள் மெட்ரிக் பள்ளி மாணவிகள் வினிஷா, தான்யா முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் ஊர்சுளா, தலைமையாசிரியர் ஜெயராணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சாரட் குமார் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினார்கள்.