திருச்சி, ஆக.26: திருச்சியில் மாவட்ட அளவில் யோகாசன சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பெண்கள், 30 ஆண்கள் என மொத்தம் 60 போட்டியாளர்கள் ராணிப்பேட்டையில் மாநில அளவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் 8 வயது முதல் 45 வயதிற்கு மேலுள்ள பிரிவுகளில் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் திருச்சியை சேர்ந்த 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அக்டோபர் மாதம் இமாச்சல பிரதேசத்தில் நடைபெறவுள்ள தேசிய யோகாசன போட்டிகளில் கலந்து கொள்வர்.
இப்போட்டிகளில் திருச்சி மாவட்ட சங்க செயலாளர் மற்றும் தேசிய நடுவர்களான யோகாச்சாரியர் ராஜசேகர், முத்து சங்கரேஸ்வரி, ராஜேஸ்வரி, சித்ரா, பரமேஸ்வரன், கண்ணன், சுப்புலட்சுமி மற்றும் மாநில நடுவர்களான சந்திரசேகர், சுதா மற்றும் யோகா ஆசிரியர்கள் முத்துலட்சுமி, சிவமதி மற்றும் அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு யோகா சங்க தலைவர் டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.