சேலம், ஆக.13: சேலம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தின் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த மகேஸ்வரி, கோவை மாநர போலீஸ் ஸ்டேசனுக்கு மாற்றப்பட்டார். ஈரோடு மாவட்டம் ேகாபிசெட்டிப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த பழனியம்மாள், சேலம் அரசு மருத்துவமனை இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்து, கோவை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தின் புதிய இன்ஸ்பெக்டராக, பழனியம்மாள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
previous post