சேலம், ஆக.15: சேலம் ஆட்டையாம்பட்டி காவல்நிலையம் அருகே பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடிப்பண்டிகை நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் அந்த கோயிலில் இருந்து ஊர்மக்கள் 150க்கும் மேற்பட்டோர், பட்டாசு வெடித்து மேளதாளங்களுடன் ஆட்டையாம்பட்டி காவல்நிலையம் வந்தனர். இதையடுத்து அங்கிருந்த இன்ஸ்பெக்டர்கள் சின்னதங்கம், சித்ரா ஆகியோருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பழத்தட்டுகளை கொடுத்து அவர்களை மேளதாளங்களுடன் கோயிலுக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு இன்ஸ்பெக்டர்கள் பூஜையை தொடங்கி வைத்தனர்.இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘கோயிலில் உள்ள சுவாமி சிலை பல ஆண்டுகளுக்கு முன்பு திருடு போனது. அந்த சிலையை போலீசார் மீட்டு ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் வைத்திருந்தனர். இதன்பிறகு இன்ஸ்பெக்டருக்கு முதல் மரியாதை செய்து அவர்களை அழைத்து சென்று கோயில் விழாவை தொடங்குவது வழக்கம். அதேபோன்று இந்நிகழ்ச்சி நடந்தது,’ என்றனர்.
இன்ஸ்பெக்டர்களுக்கு முதல் மரியாதை
previous post