கோவை, ஆக. 31: கோவை கரும்புக்கடை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கம். இவர் நேற்று முன்தினம் குற்ற வழக்கு சம்பந்தமாக விசாரிக்க போலீசாருடன் குறிச்சி பிரிவு என்பி இட்டேரி பகுதிக்கு சென்றார். அங்கு 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது வாலிபர் ஒருவர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்தார்.
மேலும் பீர் பாட்டிலை உடைத்து குத்தி விடுவதாக மிரட்டல் விடுத்தார். விசாரணையில், அவர் குறிச்சி பகுதியை சேர்ந்த ஹசைனார் (32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தலைமறைவான அபிஷேக் என்பவரை தேடி வருகின்றனர்.