பாலக்காடு, ஜூன்10: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தோட்டுக்கரா பகுதியை சேர்ந்தவர் அகில் (24). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களிடம் பழகி வந்துள்ளார். இவர் நட்பாக பழகிய இளம்பெண்களின் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் மூலம் வாங்கி தனது நண்பர்களுக்கு பகிர்ந்து பணம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் நீண்ட காலமாக இன்டா நட்பில் உள்ள இளம்பெண்ணின் போட்டோக்களை மிரட்டி வாங்கிய அகில், அவற்றை வேறொரு நபருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை அறிந்த இளம்பெண் இரிஞ்ஞாலக்குடா போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்துள்ளார்.
இதன்பேரில் அகில் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த எஸ்.ஐ., ரீஷிபிரசாத், உன்னிகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் இந்த அகிலை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் கொல்லம் டவுன் பகுதியில் போலீஸ் பிடியில் சிக்கினார். அகிலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.