திருவனந்தபுரம், செப்.1: இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான 16 வயது சிறுமியை கொச்சியிலுள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து அதனை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் முட்டம் அருகே உள்ள காஞ்சார் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (24). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி மெசேஜ் செய்து மாணவியுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளார் கார்த்திகேயன். இதையடுத்து சிறுமியை அடைந்தே தீரவேண்டும் என நினைத்த கார்த்திகேயன் சமீபத்தில் சிறுமியை தொடர்புகொண்டு நேரில் சந்திக்க கொச்சிக்கு வருமாறு அழைத்துள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த சிறுமியை கார்த்திகேயன் கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்று அறை எடுத்து தங்கியதோடு, சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்தார். அப்போது உல்லாசமாக இருந்ததை வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளார்.