நன்றி குங்குமம் டாக்டர்உலகளவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 60 கோடி பேர் வரை உள்ளனர். இந்த எண்ணிக்கை 2025-ல் இரட்டிப்பாகி, 2050-ல் 200 கோடியைத் தாண்டிவிட; வாய்ப்புள்ளது. எனவே, இன்றைய முதியவர்களும், நாளைய முதியவர்களும் புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டிய சில முக்கியத் தகவல்கள் இங்கே…* முதியோரைப் பொருளாதார ரீதியாக வஞ்சிப்பதைப் புரிந்துகொண்டு அதற்கு முடிவுகட்ட வேண்டும். வறுமை, பட்டினி, வீடிழப்பு, சுகாதார இழப்பு, நல்வாழ்க்கை; இழப்பு மற்றும் அகால மரணம் அடைய வழிகோலும் பொருளாதார மற்றும் பொருள் வஞ்சனையை உள்ளடக்கிய அனைத்து வகையான அவமதிப்புகளும்; இல்லாமல், தங்கள் முதுமைப் பருவத்தில் கண்ணியமான வாழ்க்கை வாழ்வது முதியோரின் உரிமை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். * வயது கூடும்போது உடல் உறுப்புகளின் இயக்கங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் முதியோரின்; ஊட்டச்சத்து தேவைகளில் மாற்றத்தை; ஏற்படுத்துகின்றன. முதியோர் உடல்நலத்தோடும், சுறுசுறுப்போடும் இருப்பதற்கு சத்து நிறைந்த சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும். உணவில் பழங்கள்,; காய்கறிகள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வதோடு புரதம், உயிர்ச்சத்து, தாதுச்சத்து, நார்ச்சத்து நிறைந்த சமச்சீர் உணவை எடுத்துக்கொள்வது; அவசியம். * நம்பிக்கை தேவைப்படும் ஓர் உறவுக்குள் ஒரு தனி செயலாலோ, தொடர் செயலாலோ அல்லது போதுமான நடவடிக்கை இன்மையாலோ முதியோருக்கு; ஏற்படும் துன்பத்தை ‘முதியோர் அவமதிப்பு’ என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுக்கிறது. உடலியல், பாலியல், உளவியல் மற்றும் உணர்வியல்; அவமதிப்பு, பொருளியல், பொருள் சார் வஞ்சனை, கைவிட்டுவிடுதல், புறக்கணிப்பு, கடுமையான கண்ணியம் மற்றும் மரியாதைக் குறைவு போன்றவை முதியோர்; அவமதிப்பில் அடங்கும். இத்தகைய அவமதிப்புகள் யாவும் மனித உரிமை மீறல்களாக உள்ளது. எனவே, முதியோர்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்பட; வேண்டியது அவசியம். * எலும்புப் புரை மற்றும் எலும்பு முறிவைத் தடுக்கும் சுண்ணாம்புச் சத்து நிறைந்த பால் (கொழுப்பு நீக்கப்பட்டது), பச்சைக் கீரைகள், புரதச் சத்து நிறைந்த; பருப்புகள், முட்டை வெள்ளைக்கரு போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகள், இனிப்புகள், எண்ணெய்ப்; பலகாரங்கள், உப்பு ஆகியவற்றைக் குறைக்க வேண்டும். அதிக காரமான உணவுகள் மற்றும் துரிதவகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.* நீர்ச்சத்திழப்பு மற்றும் மலச்சிக்கலைத் தவிர்க்க அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். நீடித்த நோய் பாதிப்புடையவர்கள் மற்றும் நீண்டநாள் படுக்கையில்; இருப்போரின் உடல்நிலைகளுக்கு ஏற்ற உணவுகளை மருத்துவர் ஆலோசனைப்படி; எடுத்துக்கொள்வது நல்லது.* மத்திய மற்றும் மாநில அரசுகள் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மூத்த குடிமக்களுக்குத் தனித்த, சிறப்பான,; விரிவான சுகாதாரப் பராமரிப்பை அளிப்பதே இந்த திட்டங்களின் அடிப்படை நோக்கமாக உள்ளது. உதாரணமாக தமிழ்நாடு அரசின் ஆதரவற்ற முதியோர்களுக்கான; முதியோர் உதவித்தொகை திட்டம், முதியோர் பஸ் பாஸ் திட்டம் போன்றவற்றைச் சொல்லலாம். முதியோர் பாதுகாப்பிற்காக இருக்கும் மூத்த குடிமக்கள்; பராமரிப்பு நலச்சட்டம் 2007 மற்றும் முதியோர்களை பாதுகாக்க உதவும் சிறப்பு திட்டம் போன்ற அரசின் நலத்திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி முதியவர்கள்; தெரிந்துகொள்வது அவசியம். விபரமறிந்த இளைஞர்கள் முதியவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டும்.* உடல் எடை குறைவதாலும், உடல் செயல்பாடுகள் குறைவதாலும் முதியவர்களுக்கு குறைந்த அளவு கலோரிகளே; தேவைப்படும். அவர்களுக்குப் பொதுவாக; பசியின்மை, திட உணவுகளை மென்று உண்ண முடியாதது போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதற்கு பழங்கள், காய்கறிகள் அடங்கிய மென்மையான உணவுகள்; மற்றும் திரவநிலை அல்லது கூழ்ம நிலையிலுள்ள உணவுகளை அவர்களுக்குக் கொடுக்கலாம். அவர்களுக்கான உணவு நன்றாக வெந்ததாகவும்,;; மென்மையானதாகவும் இருப்பதோடு உப்பும், காரமும் குறைவாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.; முறையான இடைவெளியில் குறைந்த அளவில்; கூடுதல் முறை உணவு உட்கொள்ளலாம்.* முதியவர்களுக்கு ஏற்படுகிற வயது தொடர்பான சிதைவு நோய்களை எதிர்கொள்ளவும், முதுமையை ஆரோக்கியமாகக் கழிப்பதற்கும் அவர்களுடைய உணவில்; சுண்ணாம்புச்சத்து, இரும்பு, துத்தநாகம், வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி; ஆக்சிடென்ட் போன்றவை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். * முதியவர்கள் தங்களின் ஆரோக்கியத் தேவைகளைப் புரிந்துகொண்டு நோய்த் தடுப்புக்கான பரிசோதனைகளைச் செய்து வர வேண்டும். ரத்த சர்க்கரை, ரத்த; அழுத்தம், உடல் எடை போன்றவற்றை முறையாக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்கொள்ள வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மருத்துவர்; ஆலோசனையின்றி நிறுத்தக்கூடாது. தேவைப்படும் சமயங்களில் முதியோர் நல மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று அதன்படி; நடக்க வேண்டும். * உடலுக்குப் போதுமான ஓய்வு கொடுப்பது அவசியம். ஓய்வு நேரங்களில் புத்தகம் வாசிப்பது, இசையை ரசிப்பது போன்ற பிடித்தமான பொழுதுபோக்குகளில்; ஈடுபடலாம். * தற்போதைய வேகமான, நவீன வாழ்க்கை முறையில் சமூகத்தின் வளர்ச்சிக்கு முதியவர்களின் பங்கு மிகவும்; முக்கியமானது. இப்போதைய இளைஞர்களின்; வளர்ச்சிக்கு அவர்களுடைய அனுபவமும், அறிவும் உறுதுணையாக; இருக்கும். அவர்களுடைய முழு பங்களிப்பு அனைத்துத் தலைமுறையினருக்கும் நல்ல; பலனைக் கொடுக்கும். எனவே, அவர்களுடைய உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது அவசியம். * சமூக, கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பொறுப்புகளை ஏற்று குடும்பத்துக்கு உதவி செய்வது, குழந்தைகள்,; குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு; மகிழ்ச்சியாக இருப்பது போன்றவை முதியவர்களின் மனநல ஆரோக்கியத்திற்கு நல்லது. * மூட்டு அசைவுகள் மற்றும் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது; நல்லது. அது உடல் வலிமை,; சமநிலை, நெகிழ்வுத் தன்மைகளைப் பேண உதவி செய்யும். தொடர் உடற்பயிற்சியின் மூலம்; சிதைவு நோய் ஆபத்துகளைக் குறைக்கலாம். காலை அல்லது; மாலை வேளைகளில் நடை, யோகா மற்றும் தியானப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். * மக்கள் நலப் பணிகளை செய்வதற்கும், பல்வேறு சாதனைகளைப் புரிவதற்கும் வயது ஒரு தடையல்ல. தங்களுடைய உடல் மற்றும்மனதை; ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் வைத்திருக்கும் நபர்கள் வயதானாலும் சாதிக்கலாம், வரலாற்றில் இடம்பெறலாம்.தொகுப்பு : க.கதிரவன்
இன்றைய…முதியோருக்கும்! நாளைய முதியோருக்கும்!
previous post