காரைக்குடி, ஜூன் 24: காரைக்குடி அருகே சாக்கவயல் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு காலை 10 மணி முதல் 2 மணி வரை புதுவயல், சாக்கோட்டை, கண்டனூர், வேங்காவயல், சாக்கவயல், மித்திராவயல், ஆம்பக்குடி, தச்சகுடி, மாத்தூர், பெரியகோட்டை, செங்கரை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.