கரூர் மாவட்ட கழக செயலாளர் வி.செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூயிருப்பதாவது: திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் 102-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு அங்கமாக கரூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் கலைஞரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது மற்றும் தமிழக அரசின் சாதனைகளை வீடு, வீடாக பொதுமக்களிடம் பிரசாரம் செய்தல், காலை 8.30 மணிக்கு கரூர் வெண்ணைமலையில் அமைந்துள்ள அன்புகரங்கள் ஆதரவற்றோர் சேவை மையத்தில் மாவட்ட கழகம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்க மாவட்ட கழகம் மற்றும் மாநகர பகுதி கழக நகரம், ஒன்றிய பேரூர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை கரூரில் உள்ள கலைஞர் அறிவாலயம், சட்டமன்ற உறுப்பினர் (எம்எல்ஏ) அலுவலகம் அருகில், கரூர் பஸ் நிலையம், சர்ச் கார்னர் லைட் ஹவுஸ், ராயனூர், தான்தோன்றிமலை, வாங்கபாளையம், வேலுச்சாமிபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் கலைஞர் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை மாநகர செயலாளர் எஸ்.பி. கனகராஜ், பகுதி கழக பொறுப்பாளர்கள் தாரணி சரவணன், ஜோதிபாசு, புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் கோயம்பள்ளி பாஸ்கரன், பி.முத்துக்குமாரசாமி, வி.கே.வேலுசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சாலை சுப்பிரமணி, மாநகர பிரதிநிதி எஸ்.வடிவேல், மாவட்ட திமுக நிர்வாகிகள் என்.ஆர்.எம்.பி. சிவசண்முகம், டிஜிட்டல் சம்பத்குமார், எஸ்.வடிவேல், பகுதி கழக வர்த்தக அணி அமைப்பாளர் அழகர்சாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட செயலாளர் வி.செந்தில்பாலாஜி அறிக்கையில் கூறியுள்ளார்.