சிவகங்கை, ஆக.6: சிவகங்கையில் மின் பயனீட்டாளர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்க உள்ளது. சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் முருகையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் இன்று, காலை 11மணி முதல் 1மணி வரை நடக்க உள்ளது. இதில் சிவகங்கை கோட்டத்திற்கு உட்பட்ட மின் பயனீட்டாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று மின் குறைதீர் கூட்டம்
previous post