திருவள்ளூர் ஆக. 31: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் இன்று 31ம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவிருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களின் அடிப்படையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் 8ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெறும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.