திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக மேயர் தயான் சந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்டு மாதம் 21 முதல் 29ம் தேதி வரை தேசிய விளையாட்டு தினமாக ஆண்டு தோறும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இந்த ஆண்டு இன்று திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு கால்பந்து மற்றும் 100 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டியும், 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு கையுந்து பந்து மற்றும் 100 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியும் மற்றும் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு 1 கிலோ மீட்டர் நடை போட்டி, 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், செஸ் மற்றும் கேரம் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
இப்போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். இன்று 29ம் தேதி காலை 7 மணிக்கு போட்டிகள் நடைபெறும். மேலும் விவரம் பெற 7401703482 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.எனவே மாவட்டத்தில் உள்ள 45 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாட வேண்டுமாறு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.