நெல்லை, ஆக.26: சுத்தமல்லி பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக டவுன், பேட்டை பகுதிகளுக்கு இன்று குடிநீர் வினியோகம் இருக்காது. இதுகுறித்து நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொண்டாநகரம் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் பிரதான குடிநீர் குழாய், சேரன்மகாதேவி மெயின்ரோடு, சுத்தமல்லி இறக்கம் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பை சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இதையொட்டி நெல்லை மண்டலம் வார்டு எண் 15 முதல் 27 வரையுள்ள டவுன், பேட்டை பகுதிகளுக்கு இன்று (26ம் தேதி) ஒருநாள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.