நாமக்கல், ஆக.15: நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா இன்று (15ம்தேதி) காலை 9.05 மணிக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவில், மாவட்ட கலெக்டர் உமா தேசிய கொடி ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொள்கிறார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து, கலெக்டர் கவுரவிக்கிறார். மேலும், சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார். விழாவில், டிஆர்ஓ சுமன், மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து பள்ளி மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
இன்று சுதந்திர தினவிழா
previous post